Mon. Jul 8th, 2024

உலகக் கோப்பை தொடர் – இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் அஸ்வின்!

வரும் 5ம் தேதி 13-வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை உட்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

காயத்திலிருந்து அக்சர் பட்டேல் குணமடையாத நிலையில் அவருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.