Sun. Oct 6th, 2024

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்நிலையில், மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.