Thu. Dec 19th, 2024

பாஜகவுடன் கூட்டணி முறிவு… 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வு – கே.பி.முனுசாமி பேட்டி

தமிழகத்தில் சமீப காலமாக பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதற்கிடையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக மவுனம் காத்து வருகிறது. மேலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பே கிடையாது என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக புதிய கூட்டணி அமைக்கும். ஆனால், பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தேர்தல் வந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. அதிமுகவிற்கு அச்சம் உள்ளதால் அதனால் பாஜகவுடன் கூட்டணி சேரும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது நடக்காது.

பாஜகவுடன் கூட்டணியை முறிப்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வாகம். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுள்ளார். இதற்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததால்தான் இந்த முறிவு என்றார்.