LEO இசை வெளியீட்டு விழா ரத்து – கடிதம் வெளியானது!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் முடிந்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால், திடீரென்று நடிகர் விஜய்யின் இசை வெளியீட்டு விழா ரத்தானது. இதனால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது சமூகவலைத்தளங்களில் விஜய் லியோ பட ரத்தான செய்திதான் பேச்சுபொருளாக மாறியுள்ளது.
இதற்கிடையில், வரும் 30ம் தேதி நடைபெறவிருந்த LEO இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ம் தேதி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது!