அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம்!
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிரிவின் தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், இணை செயலாளர்களாக கோவை சத்யன், சி.டி.ஆர்.நிர்மல்குமாரும், துணைத்தலைவர்களாக வலங்கைமான் என்.ராஜராஜசோழன், மேலூர் டி.கௌரிசங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.