Thu. Dec 19th, 2024

அப்போ தைரியமா கூட்டணி இல்லைன்னு பேசுனீங்கல்ல… இப்போ ஏன் மவுனம்? அதிமுகவுக்கு எச்.ராஜா கேள்வி

தமிழகத்தில் சமீப காலமாக பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது. இதற்கிடையில், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால், கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக மவுனம் காத்து வருகிறது. மேலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், கூட்டணி முறிந்து விட்டது என்று சொன்ன அதிமுக, இப்போது ஏன் மவுனமாக இருக்கிறது? இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏன் இப்போது தைரியமாக சொல்லமாட்றாங்க. கூட்டணி விவகாரம் குறித்து பாஜக தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும்.

பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஏன் எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்து மறுத்தார். தற்போது கூட அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ஏன் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் கொடுத்தார் என்று பல கோணத்தில் கேள்வி எழுப்பி எச்.ராஜா பேசினார்.