Mon. Jul 8th, 2024

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில், சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.