Fri. Dec 20th, 2024

சிறந்த ஆசிய நடிகர் விருதை வென்றார் நடிகர் டொவினோ தாமஸ் !

2018 படத்திற்காக நடிகர் டொவினோ தாமஸ் ஆசிய விருது வென்று அசத்தியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிய விருது வென்ற நடிகர் டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்பதில்தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018ல் நம்மை தாக்கிய பெருவெள்ளத்தால் கேரளா வீழத் தொடங்கியது. பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018ம் படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய SEPTIMIUS விருதுக் குழுவுக்கு நன்றி.. இந்த விருது கேரளாவுக்கானது என்று நெகிழ்ச்சி உரை நிகழ்த்தினார்.