Thu. Dec 19th, 2024

ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரி அனுப்பப்பட்ட வைகோவின் கடிதம் – பதில் அளித்த குடியரசு தலைவர் மாளிகை!

தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியக்கமிப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்தே தமிழக அரசுக்கும் அவருக்கு நிறைய கருத்து மோதல்கள் வெடித்து வருகிறது.

இதனையடுத்து, ஆளுநரை திரும்ப பெற கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இதே கருத்தை வலியுறுத்தி, மதிமுக சார்ப்பில் அக்கட்சி தலைவர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி, அதில் தமிழகத்தை சேர்ந்த 50 லட்சத்திற்கும் மேலானவர்கள் கையெழுத்திட்டனர். இந்த கோப்பை 60 பெட்டிகளில் வைக்கப்பட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து வைகோ பேசுகையில், 50 லட்சம் கையெழுத்து அடங்கிய கடிதங்கள் குறித்து குடியரசு தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க அனுமதி கேட்டோம். ஆனால், கிடைக்கவில்லை. அதனால், குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

இந்நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரிய கடிதம், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டுள்ளதாகவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.