17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னையில், டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வான 10,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
நடப்பாண்டு 17 ஆயிரம் பேரும், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரையும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மத்திய அரசு தேர்வுகளை தமிழ் மொழியிலேயே நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக இளைஞர்களுக்கு அரசுப்பணி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நன்மை கொடுக்கும். முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல… தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.