Thu. Dec 19th, 2024

2023 ஆசிய விளையாட்டுப் போட்டி – வெள்ளி பதக்கம் வென்று 17 வயது இந்திய வீராங்கனை சாதனை!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான டிங்கி ILCA4 போட்டியில் இந்தியாவின் நேஹா தாக்கூர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, மிகச் சிறிய வயதில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனைப் படைத்துள்ளார் 17 வயது வீராங்கனை நேஹா தாக்கூர்.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நேஹா தாக்கூருக்கு சமூகவலைத்தளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.