பழம்பெரும் பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிப்பு!
பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தி சினிமாவில் பழம் பெரும் நடிகைகளில் வஹீதாவும் ஒருவர். அன்றைய காலத்தில் தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி உட்பட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
1955ம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இவர் நடித்துள்ளார்.
மேலும், 2018ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக இவர் நடித்தார்.
வஹீதா ரஹ்மான் 1938-ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்தார். வஹீதாவின் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கலெக்டராக இருந்தவர்.
இந்நிலையில், நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.