புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்!
143 வயதைக் கடந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 150 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மிகப் பழமையான 4 கல்லூரிகளான சென்னை மாநிலக் கல்லூரி, கும்பகோணம் அரசு கல்லூரி,கோயம்புத்தூர் அரசு கல்லூரி, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆகும்.
இந்த 4 கல்லூரிகளில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி 143 வயதைக் கடந்திருக்கிறது இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவரும்,கம்பன் கழக செயலாளருமான ஆர்.சம்பத்குமார் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் நாகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் முனைவர் கணேசன் விளக்க உரை நிகழ்த்தினார்.
பொருளாளர் முனைவர் ஜீவானந்தம் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.கூட்டத்தில் வழக்கறிஞர் சந்திரசேகரன்,
கறம்பக்குடி ஜீவானந்தம், திருப்பதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் முனைவர் முருகையன் நன்றி கூறினார்.
அமானுல்லா
புதுக்கோட்டை