புதுக்கோட்டையில் ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம்!
டெல்லி பேரணியை விளக்கி புதுக்கோட்டையில்
ஜனாநயக மாதர் சங்கம் பிரச்சாரம் செய்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோர் 5-ம் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் டெல்லி பேரணியை விளக்கி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை பிரச்சாரம் நடைபெற்றது.
பெண்கள், பெண்; குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பொது விநியோத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மணிப்பூர் இனவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணடும்.
மல்யுத்த வீராங்களைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி வருகின்ற செப்.5-ல் நடைபெற உள்ளது.
இப்பேரணியை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மாதர் சங்கத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றன.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்; கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுசிலா, துணைத் தலைவர் சலோமி, பொருளாளர் வைகைராணி மற்றும் நிர்வாகிகள் முத்துமாரி, நிரஞ்சனா, பரமேஸ்வரி, சாந்தி, நித்யா, ஷபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமானுல்லா
புதுக்கோட்டை