Fri. Dec 20th, 2024

மரணத்தின் மடியில் மழலைகள் குறும்படம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியீடு…

28 ஆம் தேதி தூத்துக்குடி யில் இக்குறும்படத்தினை வெளியிட இருந்தோம் காவல்துறை தடுத்துவிட்டது அன்றும் பொதுமக்களுக்கு திரையிடவில்லை.. இன்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தான் வெளியிட்டோம் .. இது பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்பட வேண்டும் விழிப்புணர்வு வேண்டும்..போபால் சம்பவம் போல் தூத்துக்குடி யில் நடைபெற கூடாது…

நேற்று இரவு இதனை வெயிட கூடாது என மிரட்டும் தோனியில் கூறினார்கள் .. கடிதத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள்..

இதுபோன்ற குறும்படங்களை வெளியிட அனுமதி தேவையில்லை என்ற பத்த்திரிக்கை நண்பர்கள் அளித்த தகவல் தெளிவாக இருந்தது… அதன் அடிப்படையில் வெளியிட்டோம்.

எங்களுடைய கருத்து பொதுவான கருத்து காவல்துறை அல்லது அரசாக கூட இருக்கலாம் அவர்கள் ஒருபக்கமாக செயல்படுவது போல தெரிகிறது.. மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்..

போபாலில் செய்தி வெளிவந்தும் அவர்கள் விழித்து கொள்ளவில்லை..
அதனால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்படானர் ..

அது போன்ற விஷவாயு வினை வெளியேற்றுகிற நிறுவனங்களை அனுமதிக்கிறார்கள்..

அனுபவம் போபால் சம்பவம் மூலம் கிடைத்துள்ளது..

போபால் சம்பவம் போல் தூத்துக்குடியில் நடைபெறக்கூடாது என நினைக்கிறோம்..

அரசினுடைய செயல்பாடு *பாலுக்கும் காவல் பூனைக்கும் துணை* என்பது போல் உள்ளது காவல்துறையை பயன்படுத்தக்கூடாது..காவல்துறையும் எதையும் சட்டபூர்வமாக செய்ய வேண்டும்.

அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடமாட்டோம் என்ற கூறுகிறது ஆனால் அந்த நிர்வாகம் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் 6லட்சம் பேர் கலந்து கொள்கின்ற இடத்தில் துண்டு பிரசுரத்தினை கொடுத்து நியாயப்படுத்த பார்க்கிறார்கள் .. ஆலையை திறக்க முயற்சிக்கிறார்கள் இதை காவல்துறை தடுக்கவில்லை..

குறும்படத்தினை வெளியிடுவதில் காவல்துறை அரசை ஆலோசித்து இதற்கு தடை செய்தார்களா என்று தெரிவில்லை…