சிறுபான்மை மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் சொன்ன ஆசிரியர் – உச்ச நீதிமன்றம் கண்டனம்!
உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையின மாணவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியை அடித்த விவகாரத்தில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு சிறுபான்மையின மாணவனை ஆசிரியை அடிக்க சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுபான்மையின மாணவனை அடிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து நீதிபதிகள் தெரிவித்தாவது –
“நடவடிக்கை எடுக்க அனைத்து தன்மைகள் இருந்தும் சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, கடும் குற்றமாக இருக்கையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மாணவனின் தந்தை கொடுத்த வாக்குமூலம் எதுவும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. வழக்குப்பதிவு செய்யவும் காலதாமதம் ஆகியுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் “மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். மாணவனின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனைகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவு” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்