Fri. Dec 20th, 2024

வேதியியல் துறை புதுக்கோட்டை மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை!

கெம்ரங்கோலி போட்டியில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை மாணாக்கர்கள் மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

திருச்சியில் நடைபெற்ற அழகு சாதனப் பொருட்களில் வேதியியல்” என்ற தலைப்பில் மாநில அளவிலான போட்டிகளில் கெம்ரங்கோலி போட்டியில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை மாணாக்கர்கள் மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக “அழகு சாதனப் பொருட்களில் வேதியியல்” என்ற தலைப்பில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 8 போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை மாணாக்கர்கள் சுமார் 15 பேர், உதவி பேராசிரியர் கலைவாணி தலைமையில் கலந்து கொண்டனர். இதில் முதுநிலை 2ம் ஆண்டு மாணவிகள் அழகுமுத்து மீனா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் கெம்ரங்கோலி என்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினை பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரி செயலாளர் சுப்பிரமணியன் அறங்காவலர் முனைவர்.கவிதா சுப்ரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர்.பரசுராமன் மற்றும் துறைத் தலைவர் முனைவர்.முத்துகுமார் ஆகியோர் பாராட்டினர்.

P.அமானுல்லா
புதுக்கோட்டை