Thu. Dec 19th, 2024

ஆசிய விளையாட்டுப் போட்டி – தங்கம் வென்று இந்தியா சாதனை!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கம் வென்று இந்தியா வீரர்கள் சாதனைப்படைத்துள்ளது.

சீனாவில் உள்ள ஹாங்ஜூ நகரில் தற்போது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தப் போட்டி அக்டோபர் மாதம் 08ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியை சீனா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 39 வகையான விளையாட்டுப்போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

இந்நிலையில், நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடிகளான ருத்ரங்கேஷ், அய்ஸ்வரி, திவ்யன்ஸ் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.