Thu. Dec 19th, 2024

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கூடுகிறது!

சமீபத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கட்சியில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவைத்தான் நான் தெரிவிக்கிறேன். இந்த முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம். முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து, தற்போது அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்.

சமீப காலமாக அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இதனால், இனி அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்றார்.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது.

இக்கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.