டெங்கு காய்ச்சல் பரவல் – அரசு உரிய நடவடிக்கை எடுக்க திருத்தணி மக்கள் கோரிக்கை
திருத்தணியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணியில் டெங்கு காய்ச்சல் தொடங்கியது, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவு மர்ம காய்ச்சலி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி, பொது இடங்களில் நீர் தேங்குவது டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகம், என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருத்தணி காந்தி சாலையில் வசிக்கும் ஒருவருக்கும், பள்ளிப்பட்டு சேர்ந்த ஒரு நபருக்கும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது.
தற்போது, மழைக்காலம் என்பதால் கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், மழை தண்ணீர் ஆங்காங்கு தேங்கி அப்படியே நின்று விடுகிறது. இதனால், டெங்கு கொசு அதிகளவில் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
இதனால், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பொதுமக்கள் நலன் கருதி, பொது இடங்களில் நீர் தேங்கி டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் –
முருகன்