ஸ்ரீ கணபதி சச்சிதானந்த டிரஸ்ட், மெட்ராஸ் ரோட்டரி கிளப் கிழக்கு இணைந்து | ஸ்மார்ட் விஷன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி |
ஸ்ரீ கணபதி சச்சிதானந்த டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் மெட்ராஸ் கிழக்கு இணைந்து பார்வைச் சவால் உள்ள 51 நபர்களுக்கு விஷன் எய்ட் இந்தியா நிதியுதிவியுடன் பெறப்பட்ட ஸ்மார்ட் விஷன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராகத் தன்னார்வலர் செயல் இயக்குனர் விஷன் – எய்ட் இந்தியா திரு வி.எல்.நரசிம்மன், அவர்களும் சிறப்பு விருந்தினராகக் குறைந்த பார்வை மறுவாழ்வு திட்டத்தின் தலைவர் தேவி உதயகுமார், அவர்களும் கலந்து கொண்டனர்.
கேமராவும் ப்ளூடூத்தும் பொருத்தப்பட்ட செயற்கை அறிவினால் இயக்கப்படும் ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள், பிறருடைய உதவி இல்லாமல் எந்தப் புத்தகத்தையும் வாசிப்பதற்கும் அருகில் இருப்பவர் யார் என்று அறிந்து கொள்வதற்கும், நடக்கும் பாதையில் உள்ள தடைகளைத் தெரிந்து கொள்ளவும், பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு உதவுகிறது.
இதுவரை நூற்றுக்கும் மேலானவர்களுக்கு ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள் சுமார் 30 லட்சம் செலவில் கொடுக்கப்பட்டுள்ளன என்று எஸ் ஜி எஸ் மருத்துவமனை கன்வினர் டாக்டர் சிவசுப்பிரமணியன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
எஸ்.ஜி.எஸ் தொண்டு மருத்துவமனை 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணி செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வார நாள்களில் தினமும் காலை 6: 45 முதல் 8:30 மணி வரையும் ஞாயிற்று கிழமைகளில் காலை 9.30 மணி வரையிலும் அனைவருக்கும் குடும்ப நல மருத்துவர் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதரவற்றவர்களுக்கு மருந்துகளும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.
சனிக்கிழமைகளில் கண் மருத்துவ ஆலோசனையும், ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தை நல மருத்துவ ஆலோசனையும் இலவசமாகத் தரப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்கருணை கிராமத்திலும் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கிருஷ்ணக்கரணை கிராமத்திலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாரம் ஆறு நாள்களில் ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம் நடக்கின்றது. மாதம் ஒரு முறை சர்க்கரை நோய் முகாம் நடத்தப்படுகிறது.
தினமும் அனைத்து வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவாதாக எஸ்.ஜி.எஸ் டிரஸ்டின் மெடிக்கல் கன்வீனர் டாக்டர். சிவசுப்ரமணியம் அவர்கள் தெரிவித்தார்.
செய்தியாளர் – வேல்ராஜ்