Thu. Dec 19th, 2024

டெங்கு காய்ச்சல் பரவல் – ரோட்டரி சங்கம் சார்பில் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிப்பு

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ம் வீதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் செயலாளர் முத்தன் அரசகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் மெஸ் மூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண. மோகன் ராஜா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சந்திரசேகரன், மேனாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான், முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் தனகோபால், தங்கராஜா,ஆராவமுதன், சுப்பிரமணியன்,யோகேஸ்வரன்,தயாளன், பார்த்திபன்,ராமகிருஷ்ணன்,முருகேசன், குணசேகரன்,குஞ்சிதபாதம், நாகரத்தினம். மற்றும் பலர் கலந்து கொண்டனர்