Thu. Dec 19th, 2024

கோவில் நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி வயலோகம் கிராமத்தினர் மனு தாக்கல்!

தமிழ்நாடு இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் வயலோகம் கிராமத்தினர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவரிடம் இருந்து மீட்டு தர வலியுறுத்தி மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 15.55ஏக்கர் நிலம் உள்ளது. 3 ஏக்கர் மட்டும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவை துறை சார்பில் அப்போது ஆக்கிரமித்து உள்ள நபர் நில அளவை அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார். அளக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வயலோகம் பகுதியில் உள்ள தமிழ்நாடு இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் முப்பதுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கோவில் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா காலங்களில் சாமி வீதி உலா வருவதில் அப்போது இருந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சாமி ஊர்வலம் வருவதை அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி அரசியல் வளமும் ஆள் பலமும் பனம்பழமும் வைத்துக் கொண்டு தடுத்தனர் எனவே அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு முத்துமாரியம்மன் கோவிலுக்கு உள்ள 3 ஏக்கர் நிலத்தை மீட்டு தர வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்து சென்றனர்.