மோடி காலில் திடீரென விழுந்த வானதி சீனிவாசன் – கடுப்பான பிரதமர்!
பிரதமர் மோடி காலில் திடீரென விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்ற தமிழக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை பிரதமர் கண்டித்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கள் முதல் நேற்று வரை நடந்தது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடியை சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
நேற்று நாடாளுமன்ற பெண் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இன்று காலை டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பிரதமர் காரை விட்டு வந்துக்கொண்டிருக்கையில், திடீரென தமிழக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்தார். இதைப் எதிர்பார்க்காத மோடி சட்டென பின் நகர்ந்து, நோ… நோ… காலில் விழக்கூடாது என்று வானதி சீனிவாசனை கண்டித்தார்.
தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.