Mon. Jul 8th, 2024

ஆசிய கால்பந்து போட்டி – முதல் வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை!

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய கால்பந்து போட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் நடத்தப்படுகிறது. இப்போட்டி ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று துவங்கின.

இன்று ஆசிய கால்பந்து போட்டியின் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று இந்தியா நீடிக்க முடியும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் களத்தில் இறங்கினர்.

வங்கதேசத்துக்கு எதிரான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதனையடுத்து, ஆசிய கால்பந்து போட்டியில் முதல்முறையாக இந்திய தன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.