Thu. Dec 19th, 2024

ரயில் விபத்துகளின் போது உயிரிழப்புகள் – நிவாரணத் தொகையை 10 மடங்கு உயர்த்திய மத்திய ரயில்வே!

ரயில் விபத்துகளின் போது உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கான கருணைத் தொகையை மத்திய ரயில்வே 10 மடங்கு உயர்த்தியுள்ளது.

“ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் சிக்கி இறக்கும் மற்றும் காயமடைந்த பயணிகளின் உறவினர்களுக்கு இந்த கருணைத் தொகை வழங்கப்படும் என்று மத்தயி ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –

ரயில் மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகளில் இறந்த பயணிகளின் உறவினர்களுக்கு இப்போது ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்கப்படும். மேலும், சாதாரண காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும். முன்பு இந்த தொகைகள் ரூ.50,000, ரூ.25,000 மற்றும் ரூ.5,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் முதன்மைப் பொறுப்பின் காரணமாக விபத்துக்குள்ளாகும் சாலைப் பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அது முடிவு செய்துள்ளது.

மறுபுறம், தீவிரவாத தாக்குதல்கள், வன்முறை தாக்குதல்கள் மற்றும் ரயிலில் கொள்ளை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.