Sun. Oct 6th, 2024

‘நாங்கள் தான் கொலை செய்தோம்…’ – தீவிரவாதி சுக்தூல் சிங் கொலைக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் பொறுப்பேற்பு!

கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

மத்திய அரசால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனடா – இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கனடா நாட்டிற்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கனடாவின் வின்னிபெக்கில் பயங்கரவாதி சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்டதற்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தனது பேஸ்புக் பதிவின் மூலம் பொறுப்பேற்றிருக்கிறார்.

அந்த பதிவில், குர்லால் பிரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரை கொலை செய்ய சுக்தூல் சிங் திட்டமிட்டார். ஆதலால், சுக்தூல் சிங் இறுதியில் “அவரது பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார்” என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது அகமதாபாத் சிறையில் உள்ளார். அவரிடம் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தியது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கிலும் இவர் குற்றவாளியாவார்.

தற்போது, பிரிட்டிஷ் கலிபோர்னியாவின் சர்ரேயில் மற்றொரு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், சுக்தூல் சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்.