Thu. Dec 19th, 2024

தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இளைஞர் ஒருவர் திடீரென மின் கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை இறங்கும்படி கேட்டனர். ஆனால், அவர் இறங்க மறுத்துவிட்டார்.

அந்த இளைஞர் மேலே சென்றுக்கொண்டிருந்த மின் கம்பியை அடிக்கடி பிடிப்பது போல ஆக்ஷன் செய்துக்கொண்டிருந்தார். கீழே பதறிய மக்கள் வேண்டாம் என்று கத்தினர். ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் மின் கம்பியை தொட்டார். அப்போது, மின் கம்பியிலிருந்த மின்சாரம் அவர் மேல் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் உடலை ஆராய்ந்து பார்த்தபோது, சட்டையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து, அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைனா மாஜி (48) என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் பைனா மாஜி, கோவையில் எங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தார்? அவர் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தார் என விசாரித்து வருகின்றனர். மேலும், அவரின் ஆதார் அட்டை முகவரி மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.