தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷ் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!
‘சரக்கு’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அத்துமீறியதை பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து மன்னிப்பு கேட்டு கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று மன்சூர் அலிகான் நடித்துள்ள ‘சரக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், மேடையில் நின்றுக்கொண்டிருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கூல் சுரேஷின் இந்த செயலுக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் உட்பட அனைவரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க கூல் சுரேஷ் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொகுப்பாளினியிடம் தான் நடந்தது கொண்டது தவறு… என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ –