Mon. Jul 8th, 2024

அரசு பேருந்து இயக்கிய போது மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுனர் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருச்சியில் அரசுப் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேலப்புதூர் புனித ஜேம்ஸ் பள்ளி அருகே அரசு பேருந்தை இயக்கிக்கொண்டு வந்தார்.

அப்போது, வரும் வழியில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு வலியையும் பொறுத்துக்கொண்டு பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், பேருந்து நிறுத்தமுடியாமல் சாலையின் இடதுபுறம் இருந்த கடைகளின் மீது மோதி நின்றது.

ஓட்டுநர் கணபதி மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிலருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.