ஏம்ப்பா… இந்தியில் பேசினால் எனக்கு எப்படி புரியும்… நாடாளுமன்றத்தை அலறவிட்ட கனிமொழி!
புதிய நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.க்கள் கூச்சலிட்டு கத்தியபோது, நீங்கள் இந்தியில் பேசினால் எனக்கு ஒன்றுமே புரியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறிய விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று நடைபெற்று வரும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகிளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அது குறித்து விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மசோதா மீது திமுக எம்.பி.கனிமொழி பேசத் தொடங்கியபோது பாஜக எம்.பி.க்கள் கூச்சல் போட்டு கத்தினர்.
அந்த நேரத்தில் கனிமொழி, நான் இன்னும் பேசவே இல்லை.. அதற்குள் இப்படி இந்தியில் கூச்சல் போடுகிறீர்கள். நீங்கள் இந்தியில் பேசினால் எனக்கு எப்படி புரியும்…. எனக்கு இந்தியில் பேசினால் ஒன்றும் புரியாது.. அப்புறம் ஏன் இப்படி இந்தியில் கூச்சல்போடுகிறீர்கள் என்று பேசினார்.
இன்னும் அதிகமாக பாஜக எம்.பி.க்கள் கூச்சல் போட, கனிமொழி அருகில் இருருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கனிமொழி இன்னும் பேசவே தொடங்கவில்… அதற்குள் ஏன் இப்படி கத்தி கூச்சல்போடுகிறீர்கள், இதுதான் பெண்களுக்கு பாஜகவினர் கொடுக்கின்ற மரியாதையா? என்று கேட்டனர்.
இதனால் சற்று நேரம் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தற்போது சமூகவலைத்தளங்களில் கனிமொழி எம்.பி., எனக்கு இந்தி புரியாது என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.