இட்லி விற்கும் ‘சந்திரயான்-3’ திட்ட பொறியாளர் – ஷாக்கான நெட்டிசன்கள்!
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர் தீபக்குமார். பொறியாளரான இவர் இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்தார். ஆனால், இன்று இவர் சாலையோரத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 18 மாதங்களாக ஊழியம் வழங்காததால், வீட்டு பொருளாதார சுமை அதிகமாகிவிட்டது. அதை சமாளிக்க இந்த இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். பகலில் அலுவலகம் செல்வேன். காலை, மாலை என இரு வேளைகளிலும் இட்லி வியாபாரம் செய்வேன். இதனால் ஒரு நாளைக்கு எனக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை கிடைக்கும் என்றார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.