‘அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டார்!
புதுக்கோட்டை மாவட்டம் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பிற்கு எதிரான ‘அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கள்ளச்சாராயம் மற்றும்
போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான “அணையா நெருப்பு” என்ற விழிப்புணர்வு குறும்படம் அடங்கிய குறுந்தகட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (19.09.2023) வெளியிட்டு, குறும்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டு கேடயங்களை
வழங்கினார்.
பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கள்ளச்சாராயம் பயன்படுத்துவதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில்
மார்ட் மூவி கிரியேசன்ஸ் சார்பில், அணையா நெருப்பு என்ற விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இக்குறும்படத்தினை வெளியிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பொருட்டு இக்குறும்படத்தில் நடித்து தயாரித்த கிராம நிர்வாக அலுவலர் திரு.கே.செல்லத்துரை அவர்களையும், இக்குறும்படத்தில் நடித்த மற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர்களையும் பாராட்டி, கேடயங்களை வழங்கினார். இக்குறும்படமானது கள்ளச்சாராயத்திற்கு எதிராக பொதுமக்களுக்கு நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உதவி
ஆணையர் (கலால்) எம்.மாரி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும், கறம்பக்குடி வட்டம், பொன்னன்விடுதி கிராம அலுவலராக பணிபுரியும் கே.செல்லத்துரை, இயக்குநர் பேட்டை சக்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அமானுல்லா,
புதுக்கோட்டை