Sun. Oct 6th, 2024

இனி அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது – ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று முன்னாள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கட்சியில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவைத்தான் நான் தெரிவிக்கிறேன். இந்த முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம்.

முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து, தற்போது அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்.

சமீப காலமாக அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இனி அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்றார்.