Fri. Dec 20th, 2024

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி – ரஜினிகாந்த்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்த ஜெய்ஷா!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி நடிகர் ரஜினிகாந்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கெளரவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில், இந்திய, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கலந்து கொள்கின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணி தன் முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

இதனையடுத்து, அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோத உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி நடிகர் ரஜினிகாந்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாகெளரவித்தார்.

இது குறித்து பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், ரஜினிகாந்த் அவர்கள் கவர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் உண்மையான உருவகம். பழம்பெரும் நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.

தலைவா அருளுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 எங்கள் புகழ்பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை ஒளிரச் செய்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.