Thu. Dec 19th, 2024

புரட்டாசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு ஆரோக்கியத்தில கொஞ்சம் அக்கறை வேண்டும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி தேடி வரப்போகிறது. வண்டி, வாகனம் இயக்கும்போது கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். இருந்தாலும், முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் மனைவியுடன் மகிழ்ச்சி பிறக்கும்.

ரிஷபம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்களே நீங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
​சூரிய பகவானின் பார்வை உங்கள் மேல் இருப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு, பாராட்டு பெறுவீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மிதுனம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், மிதுன ராசிக்காரர்களே, உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாய் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை உருவாகும். பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரையும் மதித்து செயல்படுங்கள். பெரியோர்களின் ஆலோசனைகளை கேளுங்கள். பணத்தை சேமித்து வையுங்கள்.

கடகம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களிடம் அனுசரித்து நடக்க பழகிக்கொள்ளுங்கள். நேர்மையான சிந்தனைகளை கொண்டு வாருங்கள். அவசரமான நிலையில், எந்த வேலையையும் செய்ய கூடாது. மற்றவர்களிடம் கனிவாக பேசி, பல காரியங்களை சாதித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், சிம்ம ராசிக்காரர்களே முடிவுகளை எடுக்கும்போது கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலை சீராக இருக்கும். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி நிலவும். வேலை தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். கவனம் தேவை.

​கன்னி

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், நீங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் அடைவீர்கள். வீண் செலவை குறையுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நிதானமாக செயல்படுங்கள். பயணம் செய்யும்போது எச்சரிக்கை வேண்டும். பணி செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

துலாம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலையில் ஊக்கம் பிறக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால், மகிழ்ச்சி உண்டாகும். கடினமான சூழலில் அவர்களின் நல்ல ஆலோசனை தேவைப்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள் ஏற்படும். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

விருச்சிகம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதத்தில் நீங்கள் சில போராட்டங்களை சந்திப்பீர்கள். வேலையில் பணிச்சுமை கூடும். ஆனால் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களின் திறமை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரால் மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடிக்க முயல்வீர்கள். வீண் விவாதத்தைத் தவிர்க்கவும்.

தனுசு

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், தனுசு ராசிக்காரர்களே நீங்கள், எந்தவொரு வேலையிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். மன அழுத்தத்தை தவிர்த்துவிடுங்கள். புத்துணர்ச்சியுடன் செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்

புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், மகர ராசிக்காரர்களே வாழ்க்கையில் பல சிரமங்களை கடந்து மகிழ்ச்சியை பெருவீர்கள். உங்கள் உழைப்பு நிச்சயம் வெற்றி கொடுக்கும். ஆபத்தான வேலையை தவிர்த்து விடுங்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவை.