விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு – வீட்டிற்கு தடயவியல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருகை!
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு தடயவியல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்செய்தி ரசிகர்களையும், சினிமாதுறையினரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் விஜய் ஆண்டனியின் மகளுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனையடுத்து, தடயவியல் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மீராவின் தோழி உள்ளிட்டோர் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.