Fri. Dec 20th, 2024

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராகவும் மட்டுமல்லாமல், நடிகராகவும் உள்ளார். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல படங்களில் அவர் இசையமைத்துள்ளார். மேலும், காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2’ படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் உள்ளார். மீரா பிளஸ் 2 படித்து வந்தார். இவருடைய குடும்பம் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், இவரது மகள் மீரா, இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனியும், மனைவியும் உடனடியாக மீராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீரா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மீரா மனஅழுத்தத்தில் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.