பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கைது – அதிரடி காட்டிய போலீசார்!
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் அம்பத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் வீட்டிலிருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல திட்டமிட்டார்.
இதனையடுத்து, சென்னை- பெங்களூரு சாலையில் வாசன் சென்றுக்கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த காரை முந்திச் சென்றார். முந்திச்சென்றதோடு அல்லாமல், காருக்கு முன் சாகசம் செய்ய முயற்சி செய்தார்.
அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் பயங்கரமாக மோதி விழுந்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் வாசனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் வாசனுக்கு கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்பட பிரிவுகளின் கீழ் வாசனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், வாசனின் பைக்கையும், லைசென்ஸ்யும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில்தான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.