Fri. Dec 20th, 2024

ருத்துராஜ் தலைமையில் ஆசியப் போட்டி – இந்திய கிரிக்கெட் வீரர்களை அறிவித்தது பிசிசிஐ!

ருத்துராஜ் தலைமையில் ஆசியப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தற்போது, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் 9வது முறையாக இறுதிச்சுற்றிற்கு நுழைந்துள்ளது.

எப்போதுமே, உலக கிரிக்கெட் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் பட்டையை கிளப்பும்.

ஆனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒருமுறை கூட இறுதிப் போட்டியில் மோதியது கிடையாது.

ஆனால் இந்தியாவும் இலங்கையும் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், 8 முறை இறுதி போட்டியில் மோதி உள்ளன.

இந்நிலையில், ருத்துராஜ் தலைமையில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி வீரர்களின் விவரம் வருமா –

ருத்துராஜ் கெயிக்வாட்
ஜிதேஷ் ஷர்மா,
திலக் வர்மா,
ரிங்கு சிங்,
வாஷிங்டன் சுந்தர்,
ஷபாஸ் அகமது,
யஸஷ்வி ஜெய்ஸ்வால்,
ராகல் த்ரிபாதி,
ஆவேஷ் கான்,
அர்ஷ்தீப் சிங்,
ரவி பிஷ்னாய்,
முகேஷ் குமார்,
ஷிவம் தூபே,
ப்ரப் சிம்ரன்,
ஆகாஷ் தீப் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.