பெரியாரின் 145-வது பிறந்தநாள் – மரியாதை செலுத்திய தலைவர்கள்!
சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருப்படத்திற்கும், உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
பெரியாரின் 145வது பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிச்சாமி
பெரியாரின் 145-வது பிறந்தநாள் முன்னிட்டு, ஒட்டி, சேலத்தில் பெரியார் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பெரியாரின் 145-வது பிறந்தநாள் முன்னிட்டு, ஒட்டி தைலாபுரத்தில் பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.