பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்துவதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி இடையே மோதல்!
சென்னை அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்துவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருப்படத்திற்கும், உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் பெரியார் படத்துக்கு மரியாதை செய்வதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலையின் கீழ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
உடனே, ஓ.பி.எஸ். தரப்பினர் வைத்த படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் என்று பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.
இதன் பிறகு, பழனிசாமி தரப்பினர் வேறு ஒரு புறத்தில் பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.