Sun. Oct 6th, 2024

இன்று தந்தை பெரியார் பிறந்தநாள் – வேலூரில் பெரியார் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

இன்று தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி வேலூரில் பெரியார் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருப்படத்திற்கும், உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் உள்ள அண்ணா சாலையில், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.