உலகின் மிக உயரமான நாய் புற்றுநோயால் இறந்தது!
உலகின் மிக உயரமான நாய் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழந்தது.
அமெரிக்காவில், டெக்சாஸின் பெட்ஃபோர்டில் வசித்து வந்த ஜீயஸுக்கு நவம்பர் வந்தால் 4 வயதாக இருந்த நிலையில், எலும்பு புற்றுநோயால் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 2022ம் ஆண்டு உலகின் மிக உயரமான நாய் என்று ஜீயஸ் சாதனைப் படைத்தது.
இந்நாய் கிரேட் டேன் 1.046 மீட்டர், (3 அடி 5.18 அங்குலம்) உயரம் கொண்டது. புற்றுநோயால், ஜீயஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதன் முன் வலது கால் துண்டித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அது நிமோனியாவால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12ம் தேதி அன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக உரிமையாளர் பேசுகையில், ஜீயஸ் உண்மையிலேயே ஒரு சிறப்பு நாய். ஜீயஸ் ரொம்ப அன்பாகவும், மிகவும் பிடிவாதமாகவும் இருக்கும் என்றார்.