Sun. Oct 6th, 2024

டெங்குவிலிருந்து தப்பிக்க அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் – தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

தமிழகத்தில் தற்போது மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பருவ கால மாற்றத்தால் டெங்கு காய்ச்சலும், இன்புளூயன்சா தொற்றும் தீவிரமாக பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். மேலும், சுகாதார பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணியுங்கள். இதனால், தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.