மகன், மருமகள், பேரன் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரன் – அதிர்ச்சி சம்பவம்!
மகன், மருமகள், பேரன் மீது பெட்ரோலை ஊற்றி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, திருச்சூரைச் சேர்ந்தவர் ஜான்சன் (65). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜோஜி (38). இவருக்கு லிஜி (32) என்ற மனைவியும், டெண்டுல்கர் (12) என்ற மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் ஜான்சன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஜான்சனுக்கும், அவரது மகன் ஜோஜிக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கோபமடைந்த ஜான்சன் சம்பவத்தன்று, ஜோஜி, லிஜி மற்றும் பேரன் டெண்டுல்கர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஜான்சன் அந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, அறையின் ஜன்னல் வெளியே வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அறையில் தீப்பிடித்ததில் 3 பேரும் தீயில் எரிந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்ததோது, உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் எரிந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம், பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜான்சனை அக்கம், பக்கத்தினர் தேடினர். அப்போது, அவர் மொட்டை மாடியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜான்சன் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை.
இதற்கிடையில், ஜோஜி, மற்றம் அவரது மகன் டெண்டுல்கர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். லிஜி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகன் குடும்பத்தினரை உயிரோடு எரித்து விட்டு அப்பா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.