Fri. Dec 20th, 2024

ஆந்திராவில் எஸ்யூவி மீது லாரி மோதி பயங்கர விபத்து – 5 பேர் பலி – 11 பேர் காயம்!

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் இன்று காலை எஸ்யூவி மற்றும் டிரக் மோதி பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்து திருப்பதிக்கு சென்று 16 பக்தர்கள் ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, கடப்பாவிலிருந்து சித்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜீப் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பதி ரூவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 7 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. டிரக்கின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் எஸ்யூவி சிதைந்த நிலையில் காணப்பட்டது.