Mon. Jul 8th, 2024

1000 கோடி ஆண்டுகளில் சூரியக் குடும்பமே இருக்காது – விஞ்ஞானி தகவல்!

“இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமே இருக்காது” என்று ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி பேசுகையில்,

சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கெனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.

இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.