Sun. Oct 6th, 2024

தமிழ்நாடு என்ற பெயரை யாராலையும் நீக்க முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

குடும்பத்த தலைவிகள் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அண்ணா பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு, குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு முன், காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

இத்திட்டத்தின் மூலம், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மாதம் தோறும் பயன் பெறவுள்ளனர்.

தாழ்ந்தவன் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வைத்த பெயரை யாரைலயையும் நீக்க முடியாது. இன்று விழாவில் நான் சொல்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உதவி தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்வான் என்று பொருள் என்றார்.