Thu. Dec 19th, 2024

சனி, ராகு இடையூறுகளில் விடுபட ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்கள்…

அனுமான் எந்த நேரமும் தன்னையே அவர் மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருப்பார். அவருக்கு தன் இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே ரொம்ப பிடிக்கும். அதனால், அனுமானை வணங்கி எவ்வளவு உங்களால் முடியுமோ அத்தனை முறை “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெயராம்” என்ற மந்திரத்தை உச்சரியுங்கள்.

மேலும், ராகுவும், சனியும் ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக இருப்பர்.

புவியில் சனியாலும், ராகுவாலும் உங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால், உடனே, அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், ராகு பகவானுக்கு உளுந்தும், சனி பகவானுக்கு எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்யலாம்.

இதுபோல் செய்தால், சனி, ராகு இடையூறுகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். மேலும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றலாம். பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கலாம்.

ராமன், ராவணனி இடையே போர் நடக்கும்போது, ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து அனுமான் சென்றார். அப்போது, ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார். சக்தி மிக்க அம்பால் அனுமான் தாக்குதலுக்கு உள்ளானார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணையை பூசிக்கொண்டார். வெண்ணை மிக விரைவில் உருகும் தன்மை கொண்டது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னே நாம் நினைத்த காரியம் நிறைவேறிவிடும். இதனால்தான் பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.